ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதனால் விஜய் கால்ஷீட் இல்லாததால் தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே லிங்குசாமி அதற்கு முயற்சி செய்து முடியாமல் தற்போது தெலுங்கு நடிகர் ராமை வைத்து ஒரு படத்தை தெலுங்கு, தமிழில் இயக்கி வருகிறார். முருகதாஸுக்கு தெலுங்கு திரையுலகம் புதிதல்ல ஏற்கனவே சிரஞ்சீவி, மகேஷ்பாபுவை வைத்து இயக்கியிருக்கிறார்.


சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். அடுத்த கோடையில் கொரட்டல சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதற்கு முன் அவர் நடிக்க இருக்கும் படத்தை இயக்க ஸ்ரீராம் வேணு, கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல்,முருகதாஸ் , அனில் ரவிபுடி என நான்கு பேர் முயற்சி செய்கின்றனர்.

இவர்களில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் இந்த படத்திற்கு அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தன்னுடைய கீதா ஆர்ட்ஸ் மூலம் தயாரிப்பார் எனவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course