காதல் புகழ் விருச்சிககாந்த் பாபு ஆட்டோவில் படுத்தப்படியே மரணம்.

காதல் படத்தில் விருச்சிககாந்த் என்ற பெயரில் நடித்திருந்த காமெடி நடிகர் பாபு கடைசியில் அந்த படத்தின் ஹீரோ போலவே  சாலைகளில் சுற்றித்திரிந்து  மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு.காதல் படத்தில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என்று வசனம் பேசுவார், இந்த வசனம் மிகுந்த பாப்புலர் ஆனது இதன் மூலம் விருச்சிககாந்த்  கொஞ்சம் பாப்புலரானார். ஒரு காமெடி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சினிமாவில்  எல்லோருக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைந்து விடாது, காதல் படத்திற்கு பிறகு பாபுவுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

 

சூளை பகுதியில் சிறிய வீட்டில் தாய்,தந்தை மற்றும்  உடன் பிறந்தவர்களுடன் பாபு வசித்து வந்துள்ளார்.பாபுவின் தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்ததால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து சாலைகளில் கண்டபடி சுற்றி அலைந்தார்.கொரோனா வந்து  பாபுவின் வாழ்க்கையை சிதைத்து போட்டுவிட, உணவு கூட கிடைக்காமல் மேலும் கஷ்டப்பட தொடங்கினார்.

 

 

அலங்கோல நிலையில் பாபு சுற்றித்திரியும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது, தொடர்ந்து நடிகர்கள் சாய் தீனா, அபி சரவணன் ஆகியோர் அவருக்கு உதவினர்.

தனக்குக் கிடைத்த இடத்தில் உறங்குவது, கிடைத்ததை உண்பது என்றும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த பாபு ஆட்டோவிலேயே இறந்து கிடந்துள்ளார்.

சினிமா உலகில் நிறைய கலைஞர்கள் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடியும் என்பதற்கு தீப்பெட்டி கணேசனை  தொடர்ந்து பாபுவும்  முன் உதாரணம் ஆகி உள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com