குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ஷிவாங்கி. சமையல், கலாட்டா, ரொமான்ஸ் என இவர் செய்யும் அனைத்தும் அனைவராலும் ரசிக்கத்தக்கது. தங்கள் வீட்டுப் பிள்ளை போல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவாங்கிக்கு நம்ம வீட்டு பிள்ளை ஹீரோ, கேக் கொடுத்து பிறந்தநாள் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த கேக் புகைப்படத்தை ஷிவாங்கி இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டு இதை நான் எதிர்பார்க்கவில்லை என பதிவு செய்துள்ளார்.
இவர் இரண்டாவது சீசனில் அடித்த லூட்டி மிகவும் அதிகம். அஷ்வின்-ஷிவாங்கி இருவரும் இணைந்தாலே மக்களுக்கு மிகவும் பிடித்தது. புகழின் அன்பு தங்கைக்கு மே 25 அன்று பிறந்தநாள். சமூக ஊடகங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram