சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நம்ம சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமில்லாமல், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக இவர் தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
 
Vazh should have been my debut film: Arun Prabhu - DTNext.in
 
இவர் இதுவரை இரண்டு படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.
 
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: திரைவிமர்சனம்
 
தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘வாழ்’. அருவி படத்தின் இயக்குனர் அருண்பிரபு டைரக்ட் செய்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

Aruvi” director's second movie update;”Vaazh” first single unveiled - TTN Cinema

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட சிவகார்த்திகேயன்  திட்டமிட்டு உள்ளனர். ‘வாழ்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ஓடிடி உரிமை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course