தந்தையின் ஞாபகார்த்தமாக மகனுக்கு பெயர்சூட்டிய SK …

திரையுலகிற்கு தொலைக்காட்சிகள் மூலம் தமிழ் திரையில் வெற்றிகண்டவர் பலர் உள்ளனர். கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பின்பு வெள்ளித்திரையில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றனர். அந்த வரிசையில் சந்தானத்திற்கு அடுத்து வந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளராக பணியாற்றியவர். பின்பு, பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதையடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நிச்சல் படம் பெரும் வெற்றி பெற்று சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது முன்னணி நடிகராக வலம்வருகிறார்.இந்நிலையில், சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்திக்கு கடந்த ஜூலை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதியருக்கு முதலில் ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் அவரது மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக அவரின் பெயரை தைத்துள்ளார். தன் மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை அவரது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com