ஒரு மாதத்திலேயே ஈஸ்வரன் ஷூட்டிங் முடித்து அடுத்த படத்தில் களமிறங்கிய சிம்பு !

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், பெயர் அப்துல் காலிக், இடம் பாண்டிச்சேரி, மிஷன் மாநாடு என பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் சிம்பு இஸ்லாமியராக நடிக்கவுள்ளார். மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. யுவன்சங்கர் ராஜா மதம் மாறியபிறகு வைத்துக்கொண்ட பெயரும் அப்துல் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu in Maanadu Movie

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், கடந்த 2018 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் தடைபட்டது. அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியது. பிறகு சமாதானம் ஏற்பட்டதால் மீண்டும் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா தடை காலம் இருந்து வந்ததால் தொடங்கவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதால் இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது.

சுசீந்திரன் இயக்கிவரும் ஈஸ்வரன் படத்தில் நடிக்கும் சிம்பு வசனக்காட்சிகள் உட்பட அனைத்து காட்சிகளையும் முடித்துக் கொடுத்துள்ளார். அப்படத்தில் நடித்த 400 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு படங்கள் தாமதமாகும், சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் போன்றவற்றையெல்லாம் உடைத்து ஒரு மாதத்திற்குள்ளேயே ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்துள்ளார் சிம்பு. அதற்குள் மாநாடு படத்தில் களமிறங்கியுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

scroll to top