ஆறு நிமிட காட்சிகளை சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணிய சிம்பு

நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்திற்கு பிறகு நடித்துக் கொண்டிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மே 14  ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை பற்றி வெளியாகும் செய்திகள் அனைத்தும்  ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிம்பு சிங்கிள் டேக்கில் நடித்துள்ளது பற்றி ஆச்சரியம் பொங்க ட்விட் போட்டுள்ளனர்.  மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.


கல்யாணி அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர்களுடன் எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு திரைப்படத்தின் டீசரை 5 மொழிகளில் வெளியிட்டனர் படக்குழுவினர். மேலும் டீசரில் இடம்பெற்ற யுவனின் பின்னணி இசையும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் நேற்றைய படப்பிடிப்பின்போது, சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கியுள்ளார் வெங்கட் பிரபு. அப்போது படத்தின் முக்கியமான ஆறு நிமிடம் கொண்ட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்தியுள்ளார் சிம்பு. இந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் சிம்புவிற்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர். கல்யாணி பிரியதர்ஷனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top