ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டான நடிகை – ஒரே கல்லுல ரெண்டு மாங்கா??

பிரமாண்ட பட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது அவரின் அடுத்த படங்களின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

 

 

இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ராம் சரண் வைத்து இயக்கவுள்ளார், அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பின்பு ஹிந்தியில் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பின்பு தான் அவரின் அடுத்த கட்ட படங்களை இயக்கவுள்ளாராம்.

இந்த இரண்டு படங்களும் தற்போது உறுதியான நிலையில் இந்த படங்களுக்கு பொதுவான நடிகை தான் ஹீரோயினாக வேண்டும் என்று நினைத்த ஷங்கர். தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமான நடிகை கியாரா அத்வானி உறுதி செய்துள்ளார் இயக்குனர்.

 

 

கியாரா அத்வானி முதலில் ஹிந்தியில் அறிமுகமானார். இவர் தற்போது முன்னணி நடிகையாக ஹிந்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த முதல் படம் பெரும் வெற்றி பெற்றது.அதன் பின் ராம் சரணுடன் நடித்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஷங்கரின் இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் ஒப்பந்தமான உற்சாகத்தில் உள்ளாராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com