“இன்கேம் இன்கேம்” நடிகருடன் காதல் வயப்பட்ட பாலிவுட் நடிகை..

 “அர்ஜுன் ரெட்டி” என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அதன் பின் அவர் நடித்த “கீதா கோவிந்தம்” “டாக்ஸிவாலா” போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று  பெரும் வெற்றியும் பெற்றது. அதனை தொடர்ந்து தமிழில் அறிமுகமானார்.

தற்போது தமிழ்,தெலுங்கு மொழிகளை தொடர்ந்து ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தின் ஹீரோயினை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும்.

  அந்த வகையில் தற்போது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா அந்த படத்தின் ஹீரோயின் சாரா அலிகானை காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

இவர் பாலிவுட் முன்னணி நடிகரான சைப் அலிகானின் மகள். சாரா விற்கும் இது மூன்றாவது காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இவர் முதலில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலித்ததாகவும் அதன் பின் கார்த்திக் ஆர்யன் என்ற நடிகரை காதலித்தார் என்றும் இந்நிலையில் தற்போது விஜய் தேவர்கொண்டவை காதலிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்த பரபரப்புக்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தான் காரணமாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com