ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டும் சல்மான் கான்

கொரோனாவால் தந்தையை இழந்த மாணவருக்கு படிப்புச் செலவினை நடிகர் சல்மான் கான் ஏற்றுக்கொண்டுள்ளார். நடிகர் சல்மான் கான் கடந்த ஆண்டு கொரோனா காலங்களில் 25,000 சினிமா தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். இப்போது கொரோனா இரண்டாம் அலையில் மஹாராஷ்டிராவில் உள்ள முன் களப் பணியாளர்களுக்கு உணவு மற்றும் பல உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் எண்ணெய் பொருட்களையும் வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்த நிலையில் கொரோனா தொற்றால் தந்தையை இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் தனது ட்விட்டரில் உதவி செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ராகுல் கனால்,


சல்மான் கான் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக அந்த மாணவனின் கல்வி செலவு மற்றும் பொருளாதார உதவியும், எதிர்கால தேவைகளுக்கும் உதவி செய்வதாக சல்மான் கான் கூறியிருக்கிறார். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course