பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு விருதா? அசிங்க படுத்திய மலையாள பிரபலம்!

கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதும் பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில், அவர் இறப்புக்குப்பின்  இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு அதற்கு வைரமுத்து தேர்வாகி, விருதை பெற்றார்.

வைரமுத்துவின் நாட்படு தேறல்-புதிய முன்னோட்டம்- 86 வயது பி.சுசீலா; 16 வயது உத்ராவின் குரலில் பாடல்கள் | Vairamuthu's Natpadu theral new updates - Tamil Oneindia

இந்நிலையில் மலையாளம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை பார்வதி மேனன். இவர் சார்லி, பெங்களூர் டேஸ், மரியான் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தன் மிடுக்கான உடல்போக்கில் பல்வேறு கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக செய்து தனக்கென தனி இடத்தை இப்போது பெற்றுள்ளார். 

Parvathy-starrer Varthamanam cleared by censors- The New Indian Express

தற்போது, இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓஎன்வி விருது குறித்து அவர் செய்த இடுக்கு ஒன்று வைரல் ஆகிவருகிறது. சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது வழங்கி  சிறப்பித்தது. அதை எதிர்க்கும் வகையில் இவரின் இந்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

வைரமுத்து

அதில் அவர் கூறியதாவது:

ஓ.என்.வி அவர்கள் நம் பெருமை. இலக்கியத்திற்கான இவரின் பணி ஈடு செய்ய முடியாதது, நம்முடைய கலாச்சாரத்திற்கு இவரின் வரிகள் எவ்வளவு ஊட்டமளித்தது. இவரின் எழுத்துக்களின் மூலம் நம்முடைய மனம் மற்றும் இதயம் எவ்வளவு நன்மைகளை அடைந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த உயரிய விருதை இப்படி அவமரியாதை செய்ததன் காரணம் என்ன? பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு நபருக்கு இந்த மரியாதையை கொடுத்தது அவமரியாதை என தெரிவித்துள்ளார்.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course