பாகுபலி பிரபாஸின் அடுத்த மிரட்டல்.. பிரமாண்ட பர்ஸ்ட் லுக் வெளியானது

‘பாகுபலி’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் சுமாராக ஓடினாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும்  படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். 

Prabas and Pooja Hegde in Radhe Shyam

இந்தப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. அதுமட்டுமல்லாமல், மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரமாண்ட தயாரிப்பான இந்த படத்திற்கு “ராதே ஷ்யாம்” என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

scroll to top