இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்காவே  காரணம் – இயக்குனர் ஷங்கர்

 கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்காவே  காரணம் என குற்றம் சாட்டி இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க கூடாது என இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிடக்கோரி தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு பதிலளித்து வழக்கு தொடர்ந்துள்ள  ஷங்கர் பல்வேறு உண்மை தகவல்களை மறைத்து லைக்கா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில் அதை குறைக்கும் படி  லைக்கா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட் 250 கோடியாக குறைத்தும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் லைக்கா மீது இயக்குனர் ஷங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

 நடிகர் கமலுக்கு மேக்கப் அலர்ஜி ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானதாகவும்  அதற்குத் தான் பொறுப்பில்லை எனவும், படப்பிடிப்பின் போது கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு  போன்ற  காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

படத் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட இழப்புக்கு தான் பொறுப்பில்லை எனவும் வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2020 ஜூன் முதல் 2021 மே வரை ஓராண்டு காலத்தை  வீணடித்தது லைக்கா நிறுவனம் தான் எனவும், எனவே லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஷங்கர் கூறியுள்ளார் . இதையடுத்து ஜூன் 4 அன்று வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top