தளபதி  65  பட படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை

தற்போது ஜார்ஜியாவில் தளபதி 65  படத்தின் படப்பிடிப்புக்கு திடீரென  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தளபதி 65  ஷூட்டிங் நடக்கும் இடத்தில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கி இருப்பதன் காரணமாக படப்பிடிப்பு  பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஏனென்றால் ஜார்ஜியாவில் இப்போது அடிக்கடி  மழை பெய்து வருவதால் தொடர்ந்து படப்பிடிப்பு  நடக்குமா  என்பது சந்தேகமாக இருக்கிறது. அங்கு படப்பிடிப்பிற்கு  இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என தெரிகிறது.

இன்னும் 15 நாட்களில் ஜார்ஜியாவில் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு சென்னை திரும்பலாம் என நினைத்த படக்குழுவினர் திட்டம் ரொம்ப சொதப்பியிருக்கிறதாம். இதன் காரணமாக மேலும்  இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மழை கொடுமை  மட்டுமின்றி உலக அளவில்  கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து திட்டமிட்ட படி தளபதி  65  படத்தின் ஷூட்டிங் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகுமா  என  சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் நடன பயிற்சியாளராக இணைந்து இருக்கிறார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி இந்த வாய்ப்பை நான் மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன் என்ற பதிவுடன், பாடலுக்கான ஒத்திகை  ஏப்ரல் 24 ஆம் தேதி என்றும் மே 3ம் முதல் 9ம்  தேதி வரை பாடலின் படப்பிடிப்பு நடக்கிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால்  ஜார்ஜியாவில் ஷூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதால் இந்த தேதியில் சென்னையில் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாகி வருவதால் இங்கு சூட்டிங் எப்படி நடத்தப் போகிறார்கள் என யோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். தளபதி 65  படத்திற்கு முன் சிவகார்த்திகேயனின் டாக்டர்  படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். தளபதி 65-ல் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் தான் பாடல் வரிகள் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. டாக்டர் படத்திற்கும் சிவகார்த்திகேயன் தான்  செல்லமா  மற்றும் சோபேபி ஆகிய இரண்டு பாடல்களுக்கும் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த இரண்டு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course