மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமானார். தமிழில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த “கொடி” படத்தின் மூலம் பிரபலமானார். அனுபமாவின் துறுதுறு பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர்.
அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இன்றி தற்போது தான் தடுமாறி “தள்ளி போகாதே” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
சமீப நாட்களாக ஹீரோயின்கள் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியான போஸ் கொடுத்து போட்டோ ஷூட் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகி வருகின்றனர். அதை சிலர் பொழுது போக்காக கூட செய்கின்றனர்.
இந்நிலையில், அனுபமா தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் இதை யாரும் அவ்வளவு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
தற்போது அனுபமா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இடுப்பை காட்டும் போஸ் கொடுத்து சிக்ஸ் பேக் தெரியும் படி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “இதுவா சிக்ஸ் பேக் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா”? என்று கிண்டலடித்து வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News