சூர்யா, கார்த்தி படங்களின் நாயகி பிரணிதா திடீர் திருமணம்!

கார்த்தி, சூர்யா  உள்ளிட்ட ஹீரோக்களுடன் தமிழில் நடித்துள்ள நடிகை பிரணிதா சுபாஷ் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜன் என்ற தொழிலதிபரை நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளார் பிரணிதா.

Actress Pranitha Subhash escapes unhurt in road accident

கர்நாடகாவைச் சேர்ந்த பிரணிதா சுபாஷ் 2011ம் ஆண்டு வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானர். அதன்பின் தமிழில் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Image

தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் பிரணிதா. முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இல்லை என்றாலும் அவர்  இரண்டாவது கதாநாயகியாக சில வெற்றிகரமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரணிதாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Image

சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த பிறகு தான் அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. நேற்று கூட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்து வந்த பிரணிதா தனது திருமணம் பற்றி எதுவுமே வெளியிடவில்லை.


புதுமணத் தம்பதியினருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course