சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் புகைப்படங்கள்

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல் ஸ்டோரிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வருவது நாம் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட காதல் அதன் பின் நடந்தது அனைவருக்கும் பரிச்சயம் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற லாஸ்லியா தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு வரிசையாக திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா சமீபத்தில் பதிவிட்ட இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இலங்கை செய்திவாசிப்பாளர் பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா ஆகிய இருவருக்கும் தமிழில் முதல் அறிமுக படம் பிரண்ட்ஷிப். கல்லூரி கதையை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம் நடிகை லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது மட்டுமின்றி இரு படங்களில் நடித்தும் வருகின்றனர்.

சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கும், பிரண்ட்ஷிப் மற்றும் நடிகர் ஆரியின் பெயிரிடாத படத்தில் லாஸ்லியாவும் நடித்து வருகிறார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாக்கு போலவே கவின் .லாஸ்லியாவுக்கும் தனியாக ஆர்மி உருவானது. இந்நிலையில், அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க உள்ள லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course