சின்னத்திரை பிரபல நடிகை முல்லை சித்ரா அதிர்ச்சி தற்கொலை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடர் மிகவும் பிரபலம். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த சித்ரா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றவர். இவர், ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவர் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pandiyan Stores Actress Mullai

இளம் நடிகை சித்ரா

29 வயதே ஆகும் சித்ரா, முல்லை என்ற அவருடைய தொலைக்காட்சி பெயரால் மக்களுக்கு மிகவும் நன்கு அறியப்பட்டவர். தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” பார்க்கப்பட்டு வருகிறது. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்துவந்தார் சித்ரா.

Mullai Chitra Suicide Case

விரைவில் திருமணம்

கடந்த ஆகஸ்டு மாதம் தான், இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கொரோன ஊரடங்கு முடிந்தவுடன், இவரது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. வரும் ஜனவரி மாதம் இவரது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சித்ராவின் திருமணம் சம்பந்தமான அணைத்து செய்திகளையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் சித்ரா.

Serial Actress Chitra

தொழிலதிபர் மாப்பிள்ளை

முல்லை (எ) சித்திராவிற்கு ஹேமந்த் என்ற ஒரு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் இருவரும் தங்கள் நிச்சயதார்த்தம், கல்யாண ஷாப்பிங் என அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த தற்கொலையில் தனது வருங்கால மாப்பிள்ளையாக ஹேமந்த்திற்கு சம்பந்தம் உள்ளதா என காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Pandian Stores Mullai

ஓட்டலில் தற்கொலை

ஷூட்டிங் முடிந்து நேராக சென்னையை அடுத்துள்ள நசரேத்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு சென்றார் சித்ரா. அங்கு தன் வருங்கால கணவன், தொழிலதிபர் ஹேமந்த்துடன் தங்கியிருந்திருக்கிறார். பின்னர் அங்கேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்ராவின் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இவர் இருவருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து அதன் முடிவாக சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா என காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Actress Chitra @ Mullai

சமூக வலைத்தளங்களில் சித்ரா

நடிகை சித்ரா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் சுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார். தன் திருமண நிச்சயதார்த்தம், திருமண ஷாப்பிங் என அனைத்தையும் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்தவண்ணம் இருப்பார். அடிக்கடி, புகைப்படங்கள், வீடியோ என சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் பகிர்ந்தவண்ணம் சுறுசுறுப்பாக இருந்தவர் நடிகை சித்ரா.

Mullai Kathir from Pandian Stores

சோகத்தில் சின்னத்திரை

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொலைக்காட்சி தொடர் தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இதனால், இதில் நடித்துவந்த முல்லை என்கிற சித்ராவும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர். இவரின் எதிர்பாராத மரணம், ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை வட்டாரங்கள் இந்த சம்பவத்தால் பெரும் சோகத்தில் உள்ளது.

scroll to top