கவிஞர் வைரமுத்துக்கு ஓ.என்.வி. இலக்கிய விருது கொடுத்து கௌரவிப்பு!!!

கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.  சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இவரின் கவிதைகள் மற்றும் பாடல்கள் கேட்பவரின் மனதை உருக்குலைத்து விடும். கல்நெஞ்சங்களை கூட கரைக்கும் வல்லமை இவரின் வரிகளுக்கு உள்ளது.

நாட்படு தேறல்...முதல் பாடலின் வரிகளை வெளியிட்ட வைரமுத்து | Vairamuthu released Naatpadu Theral first song lyrics - Tamil Oneindia

தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில், இவரின் தமிழ் வரிகள் தமிழினத்தை பெருமை கொள்ளச் செய்யும். தாய் பாசம் என்றால் என்ன என்பதை தன் கவிதை திறத்தின் மூலம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்தவர். “எனக்கொண்ணு ஆனதுன்னா உனக்கு வேற புள்ள இருக்கு, உனக்கொன்னு ஆனதுன்னா எனக்கு வேற தாயிருக்கா” என்ற இவரின் இந்த வரி என்றும் மறைந்திராது அனைவரின் நினைவிலும் இருக்கும். 

கவிஞர் வைரமுத்துவைக் கவர்ந்த `சுட்டிகளுக்கான குட்டிக்கதை!' #VikatanBedTimeStories | Vikatan's daily bed time story in lyricist Vairamuthu's voice

பல்வேறு தரப்பட்ட சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்த இவரின் பாடல்கள் அன்றும், இன்றும் , என்றும் இளமையோடு இருக்கும். 2கே கிட்ஸ்கே விருப்பமான கவிஞர். இவரின் பெருமை சொல்ல சொல்ல மாளாது. சுருக்கமாக எழுத்துக்கு சொந்தக்காரர் என்றும் சொல்லலாம்.         மலையாள இலக்கிய உலகின் தேசிய விருதாக கருதப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது கருதப்படுகிறது. இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓ.என்.வி. குரூப் நினைவாக இந்த விருது கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது.

A 'musical funeral' for O.N.V. Kurup | Entertainment News,The Indian Express

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள மொழி அல்லாத தமிழ் இலக்கியவாதிகளில் ஓ.என்.வி. விருதை பெறும் முதல் கவிஞர் என்ற பெருமையை வைரமுத்து பெற்றுள்ளார். பொதுவாக ஞானபீடம் பெறும் கவிஞர்களுக்கே ஓ.என்.வி.  இலக்கிய விருது வழங்கப்பட்டு வரும் சூழலில், வைரமுத்துவின் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top