நிக்கி கல்ராணியின் புது முயற்சி… எங்கம்மா இருந்த இத்தன நாளா!!

நிக்கி கல்ராணி ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹரஹர மகாதேவகி பார்ட் 2 ல் நடிக்க மாட்டேன் : நிக்கி கல்ராணி | Dinamalar

அதில் அனைவரும் நலமாகவும், பாதுப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன் எனவும், இந்த உயிர்கொல்லி நோய் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனமான உண்மையை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது.

பழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி || Nikki Galrani Next movie details

கடந்த ஒன்றரை வருடமாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்க பெற்றிருப்பதே பெரும் பாக்கியம், நமக்கு அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கிறது என்றால் அதற்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை நிலையற்றது, இந்த நிலையில் நாம் நமக்கு கிடைத்த வளங்களை தேவையுள்ளவர்களுக்கு இயன்ற உதவியை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றும், நான் எப்போதுமே மிகவும் எளிமையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

என்னை பொறுத்த வரை குறைவானதே நிறைவு , எனது இந்த கொள்கை என் ஆடைகளுக்கும் பொருந்தும், இருந்தாலும் பலரை போல் நானும் எனது தேவைகளை விட அதிகமாக உடைமைகளை வைத்திருப்பதாக உணர்கிறேன், எனவே அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த ஆசைப்படுகிறேன்.

நீங்களும் உங்கள் வீட்டில் தேவைக்கு அதிகமாக உடமைகளை வைத்திருந்தால், அதை சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக த்ரிப்ட் ஷாப்பிங் [ THRIFT SHOPPING ] இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள், அதன் அடிப்படை நோக்கம், தேவை இருக்கும் மக்களுக்கு உங்கள் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இதன் மூலம் பல பேர் தங்கள் வாழ்வாதாரங்களை பூர்த்தி செய்து கொள்வார்கள் இதற்கு நானும் த்ரிப்ட் ஷாப்பிங் குழுவும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course