திருமணம் பற்றிய புதிய தகவல் கூறியுள்ளார் இளம் இயக்குனர் ??

இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும், அந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவரும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அவ்வப்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகும்.


இந்நிலையில், நயன்தாரா ஒரு பக்கம் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக உள்ளார். தற்போது தமிழில் 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மற்றொரு பக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்.


தற்போது பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறி வருவது வழக்கமாகி வருகிறது. இதில், ரசிகர் ஒருவர் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் கல்யாணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் என்றும் அதற்காக சேமித்து வருவதாகவும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதும் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top