ப்ரேமம் பட இயக்குனர் சொன்ன புதிய தகவல் – அவங்க இல்லையா??

சமீபகாலமாக திரைத்துறையினர் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களிடம் கேள்வி கேட்குமாறும் அதற்கு அவர்கள் பதில் அளிப்பதாகவும் கூறி வருவது வழக்கமாகி உள்ளது. தற்போது ப்ரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வலைத்தள பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி கேட்குமாறு கூறியிருந்தார்.

              இந்நிலையில் ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதில், அதிகமாக பிரேமம் படத்தை பற்றிய கேள்விகள் தான் பல ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாய்பல்லவியின் கதாபாத்திரமான மலர் டீச்சர் பற்றிய கேள்விகள் எழுந்தன. அப்போது, ரசிகர் ஒருவர் மலர் கதாபாத்திரத்திற்கு முதலில் எந்த நடிகையை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு, அல்போன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு பதில் கூறியுள்ளார்.

 

             பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்திற்கு முதலில் அசினை தான் தேர்வு செய்தேன். ஆனால், அந்த சமயத்தில் அசினை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நிவின் பாலி முயற்சியும் இயலவில்லை என்று கூறினார். அசின் நடித்திருந்தால் மலர் டீச்சர் கொச்சியில் இருந்து வருவது போல கதை அமைக்கப்பட்டது. அசினை தொடர்பு கொள்ள முடியாததால் தமிழில் இருந்து சாய்பல்லவி அதாவது மலர் டீச்சர் வருவதாக கதையை மாற்றினேன் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் கூறுகையில் அசின் நடித்திருந்தால் கூட சாய்பல்லவியை போன்று நடனமாடி இருக்க மாட்டார் என்று கூறி வருகின்றனர்.தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course