தனி விமானத்தில் வந்து இறங்கிய நயன்தாரா – வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா  தற்போது சம்பளத்தையும் உயர்த்தி விட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. இதற்கு முன் 4 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தனது சம்பளத்தை 8 கோடியாக உயர்த்தி விட்டாராம்.  


நயன்தாரா, கதையில் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாக இருந்தாலும் சரி, கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி என இரண்டு வகையான படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சோலோ ஹீரோயினாக நடித்து வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் வசூல் கோடிக்கணக்கில் குவிந்தது. பாலிவுட் நடிகைகளுக்குப்  பிறகு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்சிகளில் நடிக்க நயன்தாரா ஹைதராபாத்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top