இசையமைப்பாளர் டி. இமான் தாயார் காலமானார்! துக்கத்தில் அவரது குடும்பத்தினர்!

கொரோனா அலையின் 2 வது ஆட்டம், இன்று உலகை ஆட்டி படைக்கிறது. வரலாறு காணாத தொடர் உயிரிழப்பு கேட்பவர் மனதை பதைபதைக்க செய்யும் நிலையில், நம்மில் பலர் நம் சொந்தங்களை இழந்து வாடி கொண்டிருக்கிறோம். இன்னும் பலர் தன் சொந்தங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். 

 இந்த நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இருப்பவர், இல்லாதவர் என பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தன் பலத்தை காட்டி வருகிறது. கிருமிக்கு முன் அனைவரும் சமம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

தன்னுடைய இனிமையான இசையால் பல ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து, அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,  மே 23-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய தன்னுடைய தாயார், மே 25-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

கோமாவில் இருந்த தன்னுடைய தாயாருக்கு மருத்துவமனை ICU-வில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தருணங்களையும் பகிர்ந்துகொண்டு, உணர்வு பூர்வமான வார்த்தைகளால் வெளிப்படுத்தி இப்படிக்கு உங்களுடைய ஒரே மகன் இமான் என பதிவிட்டுள்ளார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course