ஓடிடியில் வெளியீடு – ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு???

 

திரிஷா சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மோகினி, 96, அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் “பரமபதம் விளையாட்டு”. இதில், திரிஷா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சென்ற ஆண்டு மார்ச் மாதம் வெளியிட வேண்டிய படம் கொரோனா பாதிப்பு காரணமாக மற்றும் லக்கடவுனால்  ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, தமிழ் புத்தாண்டு அன்று ஏப்ரல் 14 தேதி ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top