தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு என பல திரையுலக பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்.
இப்படம் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரானா தாக்கம் வந்ததால் சற்று தள்ளிபோய் தேதி இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் இப்படம் வரும் 2021 பொங்கல் அன்று வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் “மாஸ்டர் பட டிரெய்லர் பார்த்து விட்டேன் மிகவும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என தனது முதல் விமர்சனத்தை கூறியுள்ளார், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

தனது வெற்றியை சிறிதும் தனது தோளில் தூக்கி கொள்ளாமல் முகுந்த தன்னடத்துவுடன் இருப்பதே இவரது சிறப்பு. தனது படங்களை பற்றி பெரிதும் பேசிக்கொள்ளாதவர், இப்பொது மாஸ்டர் பட டிரெய்லர் பற்றி கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.