ராதா மோகன் இயக்கத்தில் “மலேசியா டு அம்னீஷியா” – சுவாரசியமான படம்!!

‘காற்றின் மொழி’ படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ஏற்கனவே அவர் இயக்கிய ‘பொம்மை’ இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான ‘மலேஷியா டு அம்னீஷியா’வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர்கள்: வைபவ், வாணி போஜன், கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன்,  சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி.

மலேஷியா டு அம்னீஷியா திரைப்பட விமர்சனம் | Malaysia to Amnesia Movie Review - Film Crazy

அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன்-மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.

Malaysia to Amnesia movie review: MS Bhaskar makes this comedy film tolerable | Entertainment News,The Indian Express

பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலைமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார். மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வைத்துக் கொண்டு ஒரு காமெடி திரைப்படத்தைத் தந்திருக்கிறார் ராதாமோகன்.

Radha Mohan's Malaysia to Amnesia gears up direct OTT release! Tamil Movie, Music Reviews and News

கதையின் ஆன்லைன் சுவாரஸ்யமாக இருக்கிறது. தவிர, துப்பறியும் மாமாவின் பாத்திரமும் கதைக்கு கலகலப்பை சேர்த்திருக்கிறது. ஆனால், எல்லாம் இருந்தும் ஒரு முழுமையான சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தைத் தரவில்லை. மாறாக, 80களில் தூர்தர்ஷனில் வெளியான ஓரங்க நாடகங்களில் ஒன்றைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது படம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women