லேடி சூப்பர் ஸ்டார் நடித்த மலையாள படம் ஓடிடியில் வெளியீடு! 

நடிகை நயன்தாரா மலையாளத்தில் நடித்த நிழல் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா நல்ல திரைக்கதை அமைப்பு உள்ள மலையாள படத்தில் நடிப்பது அவரின் வழக்கமாகும். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளர் அப்பு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

திரில்லர்  திரைப்படமான நிழல் கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் திரையரங்குகள் அனைத்தும்  கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக பட குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி வரும் மே 11 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 

லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கி வரும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார்.  அந்த படத்தில் நயன்தாரா வழக்கறிஞராக நடிக்கிறாராம். இதையடுத்து தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கி வரும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் அந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course