“எக்ஸ்பிரஷன் குயின்” இருப்பாங்களோ?? – விஜய் 65 படத்தின் மற்றொரு ஹீரோயின்..

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜயின் 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளனர்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

 

மேலும், இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே என்று சமீபத்தில் தான் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

                   

 

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ரஷ்யாவில் தான் எடுக்க உள்ளார்களாம். இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளை சமீபத்தில் இயக்குனர் நெல்சன் சென்று பார்த்துள்ளார்.இதனை அவரின் வலைதள பகுதியில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

                        

 

இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே தான் என்று ஓரளவுக்கு ரசிகர்கள் கணித்திருந்தனர்.தற்போது இதில் ட்விஸ்ட் கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன் விஜய் 65 படத்தில் மற்றொரு ஹீரோயின் உள்ளார் என்று கூறி இருக்கிறார். அந்த ஹீரோயின் யார் என்று ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக எக்ஸ்பிரஷன் குயின் ஆக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா இருக்குமோ என்று தயாரிப்பு வட்டாரங்களில் கூறிவருகின்றனர் அல்லது கருப்பன் படம் மூலம் அறிமுகமான தன்யா ரவிச்சந்திரன் இருக்குமோ என்ற பேச்சும் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து படப்பிடிப்பு வட்டாரத்தில் இருந்து எந்தவித செய்தியும் வெளிவரவில்லை. எது எப்படியோ விஜயின் 65 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்ற உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course