சாக்லேட் பாயுடன் ஜோடி சேர்கிறார் நடிகையர் திலகம்!!

நடிகர் அதர்வா பானா காதடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தநிலையில் அதன்பிறகு வெளியான ஈட்டி, இமைக்க நொடிகள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து நடிப்பில் பரிமாற்றங்கள் தந்தார்.தற்போது இயக்குனர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் மீண்டும் பாலாவுடன் கூட்டணி அமைக்கிறார் அதர்வா. இந்த படம் பாலா மற்றும் அதர்வா இணையும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என்று பிசியாக நடித்து வருகிறார். ரஜினி, மோகன்லால் மற்றும் மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com