விக்ரம் நடித்து வரும் “கோப்ரா” படத்தின் சண்டை காட்சிகளுக்காக ரஷ்யா சென்று படப்பிடிப்புகளை முடித்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதுவும் இசைப்புயலின் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய “தும்பி தும்பி ” பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக உள்ளது. தற்போது இந்த படத்தை முடித்த சியான் விக்ரம் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் மகன் துருவ் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
மேலும், இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் சமீபத்தில் வெளியான தகவல் இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்று கூறிய படக்குழுவினர். தற்போது இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமையுள்ளர் என்று உறுதிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் எடுக்கவுள்ளாராம்.