எப்படி இருக்கிறது கர்ணன் திரைப்படம்?

ஒடுக்கப்பட்ட தன் கிராமத்தின் உரிமைகளை மீட்க வாளேந்தும் வீரனின் புராணம், இந்த ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்க தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கர்ணன்’ படம் எப்படி?

 

 

1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா, கந்தசாமி மகனுக்கு கண்ணபிரான் பெயர் இருக்கும், மாடசாமி மகனுக்கு கர்ணன் பேர் இருக்க கூடாது. என வசனங்கள் படத்திற்கு பலம். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்து அழகு படுத்தி இருக்கிறார்.

 

 

 

கர்ணன் படத்தில் நாயகனை வாளேந்த வைத்து தன் மக்களுக்கான உரிமையை போராட்ட வகையில் அமைந்திருக்கிறது . இப்படத்தில் நாயகனும் இரத்தம் சித்துகிறார் சித்தவனும் வைக்கின்றார். இரத்தம் அதிகம் சிந்தாமல் இருந்திருந்தால் மேலும் இப்படம் ரசிக்கப்பட்டு இருக்கும்.

 

 சந்தோஷ் நாராயணன் இசையில் 3 பாடல்கள், ஹிட் ரகம். குறிப்பாக தேவா பாடியிருக்கும் ‘‘என் ஆளு மஞ்சனத்தி எடுப்பான செம்பருத்தி. ’’ரசிகர்களை ஆட வைக்கிறது. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, கிராமத்து யதார்த்தங்களை உயிரோட்டமாக படம் பிடித்து இருக்கிறது.

 

 

மாரிசெல்வராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். ஒரு பெண் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு நடுரோட்டில் கிடப்பது போல் மர்ம நாவல் பாணியில், படம் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து ஒரு திகில் படத்துக்குரிய பதற்றத்துடன் கதை வேகம் பிடிக்கிறது. படம் முழுக்க அந்த பதற்றம் தொடர்கிறது.

 

 

கன்னி தெய்வம் போல் வரும் பொம்மை சிலை, குதிரையுடன் வரும் சிறுவன், கால்கள் கட்டப்பட்ட கழுதை என படத்தில் கிராமத்து அம்சங்கள் நிறைய. ஊர் பெரியவராக வாழ்ந்திருக்கும் லாலை தனுஷ் அடிக்கடி அடிக்க பாய்வது தேவையா? ‘கிளைமாக்ஸ்’ சில், ரத்த சேதாரம் அதிகம்.

 

 

சுருக்கமாக சொல்லவிடுமென்றால் பொடியன்குளம் கிராமத்தில் பேருந்து நிற்கவில்லை என்பதை சுருக்கமாக சொல்லாமல் இதற்கு வலுவான திரைக்கதையும்,  அழுத்தமான வசனங்களும், ஹார்ப்பான வசனங்களுடன் அழுத்தம் திருத்தமாய் சொல்லுகிறார் மாரி செல்வராஜ். மேலும் சாதி மோதல்கள் மற்றும் இரத்தம் தெறிக்கும் வைகையில் இருப்பதால் இப்படத்திற்கு மைனஸ் என குறிப்பிடுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course