தேசிய விருது நடிகை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் “தலைவி”. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஆக அரவிந்தசாமி நடித்துள்ளார்.மேலும், சமுத்திரக்கனி, பூர்ணா என நட்சத்திரப்பட்டலாமே நடித்துள்ளது.இந்நிலையில், கங்கனா அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளபக்கங்களில் அவ்வப்போது படத்தை பற்றிய செய்திகளை பதிவிட்டு வந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்து வந்தார்.சமீபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு மும்பையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இந்த படத்தின் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாக்கியுள்ளனர். நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் எப்போது என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். வரும் செப் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்காக நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது சென்னைக்கு வந்த நடிகை கங்கனா முதலில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course