திரையரங்கம் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ளது கங்கனாவின் படம்…

இயக்குனர் எ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “தலைவி”. இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம். மேலும், இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். ரிலீசுக்கு தயார்நிலையில் உள்ளது.இந்த படத்தில் அரவிந்தசாமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கொரோன நோய் தொற்று அச்சத்தின் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு அறிவித்திருந்தனர். தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஊரடங்கு நீக்கி திரையரங்குகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரையரங்குகள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தலைவி படத்தை படக்குழுவினர் திட்டமிட்டபடி முதலில் திரையரங்கில் வெளியிட்ட பிறகு ஓடிடி தலமான நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசானில் ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர். இதற்கு முன்பு ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான குயின் வெபிசிரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தலைவி படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course