கொழு கொழுவென இருப்பதால் விமர்சனம் செய்யாதீர் – வருத்தத்தில் உள்ளார் இலியானா ??

 

தமிழில் வெளியான கேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இலியானா. அந்த படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து தெலுங்கில் நடித்து அங்கு முன்னணி ஹீரோயின் ஆனார்.அதற்கு பின் மீண்டும் நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

 

 

 தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்து அதை தொடர்ந்து ஹிந்தி திரையுலகில் கால் பதித்து அங்கும் சில படங்களில் நடித்து வந்தார். மேலும், கடந்த ஒரு சில வருடங்களாகவே இலியானாவின் உடல் எடை அதிகரித்து வந்தார் இந்நிலையில் அவரின் பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின.

                  

 

அவர் அளித்துள்ள பேட்டியில் எல்லாரும் எனது உடல் அமைப்பை பார்த்து விமர்சனம் செய்கின்றனர். முன்பு இருந்த உடல் தோற்றத்தை பார்த்து இடுப்பழகி என்று அழைத்தார்கள்.    ஆனால்,இன்று எனது தோற்றம் மாறி இருப்பதை பார்த்து வேறு மாதிரி விமர்சனம் செய்கின்றனர் என்று வருத்தத்தில் உள்ளாராம் இலியானா.

                 

 

பேட்டியின் போது அவர் கூறுகையில் எனது உடல் தோற்றத்தை பார்க்கும் போது எனக்கே அதிருப்தியாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கும் அழகான விஷயங்களை கவனிக்க வேண்டும்.எனது மூக்கும்,உதடும் அழகாக இருக்காது.எனது உயரமும் சரியானது இல்லை. கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால்,அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது உடலில் இன்னும் அழகான பகுதிகள் நிறைய உள்ளது. அதற்காக என்னை பாராட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top