“இப்படியொரு மனுஷனை பார்த்ததேல்லை ” -வியக்கும் சுதா கொங்கரா!

கடந்த 2010 ஆம் ஆண்டு துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுதா கொங்கரா. ஆனால், அவரை முன்னணி இயக்குநராக்கியது 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம்தான். இப்படத்தில் மாதவன் ரித்திகா சிங் நடித்திருந்தனர். இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்தது.

அப்படத்தில் ரித்திகா சிங்கின் அப்பாவாக காமெடியோடு கலந்த குணச்சித்திர வேடத்தில் கலக்கியிருப்பார் காளி வெங்கட். தற்போது சூரரைப் போற்று படத்திலும் காலி வெங்கட் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது எல்லா படத்திலும் காளி வெங்கட்டை இயக்க ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் சுதாகொங்கரா கூறியுள்ளார். சூரரைப் போற்று ஷூட்டிங்கின் போது ஊர்வசி மேடமும் சூர்யாவும் பேசும் சீன்களை படமாக்கிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது அங்கு வந்த காளி வெங்கட், ஒரு பக்க வசனத்தை அப்படியே படித்து உடனடியாக சூர்யா போல் பேச பேச சூர்யா அப்படியே நடித்தார்.

Soorarai Potru Suriya

எனது 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் இப்படியொருவரை பார்த்ததில்லை என்று பாராட்டவும் செய்தார், சுதாகொங்கரா பேசிய வீடியோவை காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காளி வெங்கட் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் . காளி வெங்கட் தெகிடி, முண்டாசுப்பட்டி படங்களின் மூலம்தான் பிரபலமானார்.

scroll to top