லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ்கள்!

ஊரடங்கை முன்னிட்டு எந்த படத்தையும் திரையரங்கில் போய் பார்க்க முடியாத நிலையில், வீட்டில் இருந்தபடியே நம் கண்ணனுக்கு கிடைக்கும் விருந்து வெப் சீரிஸ் [Web Series]. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ் வரிசைகளை பார்க்கலாம்.

ஆட்டோ சங்கர்: 

                               Auto Shankar review. Auto Shankar Kannada movie review, story, rating - IndiaGlitz.com

இது ஆட்டோ சங்கர் ஒரு கேங்ஸ்டார். 80’ஸ் களில் நடந்த தீவிரவாதம், வஞ்சகம், சதி, துரோகம்,பழிவாங்குதல் இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாகம் உள்ளது. சண்டைக்காட்சிகளை விரும்புவர்களுக்கு இது நல்ல விருந்து தான்!

இரு துருவம்: 

Iru Dhuruvam – An edge-seated psycho thriller | StudioFlicks

சோனிலைவ்வில் வெளியாகியிருக்கும் ‘இரு துருவம்’வெப் சீரிஸ், ஒரு சைக்கோ ஒவ்வொரு கொலைக்கும் ஒரு திருக்குறளை எழுதி வைக்கிறான். ஒரு பக்கம் இப்படி `தொடர்கொலை ‘ நடந்து கொண்டிருக்க , தன் மனைவியைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஒரு இன்ஸ்பெக்டர். இது காவல்துறையின் உச்சகட்ட விசாரிப்பை சார்ந்த ஒரு பாகம், விறு விறுப்பாகவும், திரில்லராகவும் படத்தை எடுத்து செல்கிறது. 

விடாது கருப்பு:

22 வருடங்கள் கழித்து வரும் “விடாது கருப்பு” – அமானுஷ்ய தொடர்

இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளால் நடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதன் மர்மத்தினை உடைத்து சொல்லுகின்ற வகையில் திரைகதை அமைக்கப்பட்டிருந்து. இது மர்மம் நிறைந்த கதை, கருப்புசாமியை மையமாக கொண்டு, தொடர்ந்து நடக்கும் சாவுகளின் பின்னணி குறித்து எடுக்க பட்டது.  

குயின் [queen ] : 

Queen Web Series ( By MX Originals ) : Release Date, Cast, Real Names and more.. - Wiki King | Latest Important News

ஒரு திறமையான பெண்ணின் பின்னணி கதை, படிப்பின் மேல் ஆர்வம் உள்ள  பெண்ணை வலுக்கட்டாயமாக நடிகை ஆக்கி, அத்துறையில் சாதனை பல புரிந்த பிறகு அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிய பெண்ணின் கதை . இரும்பு மனுஷியாக இருந்து ஆயிரம் ஆண்களை தன் திறமையான ஆட்சியால் அடக்கி வைத்தவரின் கனிந்த மனது, ஆசை, விருப்பம், தைரியம், வாழ்க்கை மற்றும் இறுதி காலம் குறித்த கதைக்களம்.

ட்ரிப்ள்ஸ் [ Triples ]:

Jai - Vani Bhojan's Triples Trailer Tamil Movie, Music Reviews and News

மூன்று நண்பர்களின் மறக்க இயலாத பயணத்தின் கதையே இத்தொடர். தொழிலில் பங்குதாரர்களாகவும், இணைபிரியாத நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில்  நடக்கும் குழப்பங்களே இதன் கதை, காதல், காமெடி என குடும்பமாக பார்க்க ஏற்ற படம்.

நவம்பர் ஸ்டோரி [ November Story ]:

நவம்பர் ஸ்டோரி'- தமன்னா நடிக்கும் புதிய வெப் சீரிஸ் | Tamannaah Bhatia plays ethical hacker in November Story - hindutamil.in

தரமான மேக்கிங்கில், தேர்ந்த நடிகர்களின் நடிப்பில், பிரமாதமான சஸ்பென்ஸ் த்ரில்லராக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது ‘நவம்பர் ஸ்டோரி’. ஏழு எபிசோடுகள் கொண்ட ‘Whodunnit’ வகை கதையான ‘நவம்பர் ஸ்டோரி’ அப்பா மகள் குறித்த கதை. நாவலாசிரியர் அப்பாவை காப்பாற்றும் பெண்ணின் பின்னணி.                 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com