அவருக்கு உன்னோட அப்பா வயசு இருக்கும் – தொடர்ந்து சர்ச்சையில் மாட்டும் கவிஞர் வைரமுத்து!

கடந்த ஒரு வாரமாகவே ஓஎன்வி விருதுக்காக சின்மயி, பார்வதி மற்றும் பல பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போது சின்மயி போட்டு தாக்கிய வைரல் கமென்ட் சர்ச்சைக்கு உள்ளாகியது.

மிரட்டுகிறது மீ டூ புகார்: வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது? | Dinamalar Tamil News

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை பல பாடல்களை  எழுதி பதக்கங்களையும், விருதுகளையும் வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தேசிய விருது பெற்ற இவரின் மீது சின்மயி பாலியல் குற்ற சாட்டை வைத்தார். இவரை தொடர்ந்து பல பெண்கள் மீ 2 என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். 

ஆதாரத்தை வெளியிட்டார் சின்மயி… மேலும் சில ஆதாரங்களை வெளியிடுவேன் என எச்சரிக்கை! - TopTamilNews

ஏற்கனவே சின்மயி 2019 ஆண்டு வைரமுத்துவுக்கு கிடைக்க வேண்டிய டாக்டர் பட்டம் கிடைக்க கூடாது என கோபமுடன் தெரிவித்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்கள் என வைரமுத்துவின் 100 பாடல்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வைரமுத்துவின் முதல் பாடல் ஏப்ரல் 18 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிடப்பது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், சில முன் தினங்களுக்கு  முன் வெளியான என் காதலா காதல் வயது பார்க்குமா என்ற பாடல் வெளியிடப்பட்டது. 

இந்த பாடலில் ஓரிரு இடத்தில் வயதால் நம் வாழ்வு முறியுமா ….. வாய்முத்தம் வயது அறியுமா.. என்ற வரிதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வரியை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கலைஞர் தொலைக்காட்சியில் இது போன்ற பாடல் வெளிவர கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கும் சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course