திரிஷ்யம் 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக உரிமையை  பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்!

மும்பையில் திரிஷ்யம் 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக  பிரபல தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டூடியோஸ்  உரிமையை  கைப்பற்றி உள்ளது. மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2  திரைப்படம் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களை குவித்தது. இதையடுத்து திரிஷ்யம் 2  திரைப்படம் தெலுங்கில்  ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர்.

சீட் எட்ஜ் திரில்லர்

மோகன்லால் ஜார்ஜ் குட்டியாக மாறி தனது குடும்பத்தை காப்பாற்றும் திரிஷ்யம் 2 திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக மீண்டும் உருவாகி இருந்தது. இதையடுத்து இந்த திரைப்படம்  தியேட்டர்களில் வெளியிடாமல் அமேசான் பிரைமில் வெளியிட்ட திரிஷ்யம் 2 திரைப்படம்  நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் ரீமேக் 

முதல் பாகமான திரிஷ்யம் தமிழ், தெலுங்கு, இந்தி என  பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிநடைபோட்டது. மலையாளத்தில் வெளியாகிய திரிஷ்யம் 2 திரைபடம் வெற்றிப்பெற்றுள்ள நிலையில், உடனடியாக தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் மலையாள திரிஷ்யம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்பை வைத்தே தொடங்கினார். தெலுங்கு  திரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த மீனா மற்றும் நதியா மீண்டும் இணைந்துள்ளனர்.

தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் 

திரிஷ்யம் படத்தை தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் செய்ய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தன. இதையடுத்து பிரபல தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டூடியோஸ் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது. இந்த சந்தோஷமான செய்தியை பனோரமா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர்களான குமார் மாங்கத் பதாக் மற்றும் அபிஷேக் பதாக் ஆகிய இருவரும்  பகிர்ந்துள்ளனர். 

மீண்டும் இணைவார்களா

இந்தியில் கடந்த 2015ம் ஆண்டு திரிஷ்யம் முதல் பாகம்  ரீமேக் செய்யப்பட்ட நிலையில்  68 கோடிகளுக்கும் மேல் வசூல் குவித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஹீரோவாக அஜய் தேவ்கனும் ஹீரோயினாக ஸ்ரேயாவும், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபுவும் நடித்திருந்தனர். இதையடுத்து  இந்தியில் திரிஷ்யம் 2  மீண்டும்  உருவாகவுள்ள நிலையில், அஜய் தேவ்கன், தபு மற்றும் ஸ்ரேயாவே இணைந்து நடிப்பார்களா? அல்லது நடிகர்கள் மாற்றப்படுவார்களா? என்பதை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

 

இயக்குநர் இல்லை 

கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி 50 வயதான இயக்குநர் நிஷிகாந்த் கமாத் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். திரிஷ்யம் இந்தி படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப்பை வைத்தே இயக்குவார்களா? இல்லை வேறு ஒரு இந்தி இயக்குநரை வைத்து இயக்குவார்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women