மீண்டும் தந்தையானார் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் சாண்டி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர்,  பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். பிக்பாஸில் மிகவும் மனதைக் கவரும் தருணங்களில் ஒன்று, அவரது அழகான பெண் குழந்தை லாலா, நிகழ்ச்சியில் குடும்ப வாரத்தில் தோன்றினார். இப்போது, டான்ஸ் மாஸ்டர் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளார். இதனை அவரது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

             

2017 ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் காதலி டோரதி சில்வியாவை திருமணம் செய்துகொண்டார். மே 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.  இப்போது, ​​டோரதி தனது வலைதள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.

              

தனது கர்ப்பத்தை அறிவித்த டோரதி ஒரு வளைகாப்பு படத்தை பகிர்ந்து கொண்டார் மற்றும் அந்த பதிவில் அவர் கூறுகையில்  – “இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி – கடவுளின் மகத்தான கிருபையால், இந்த ஆகஸ்டில் நான்கு பேர் கொண்ட குடும்பமாகபோகிறோம்!!!  இந்த சூழ்நிலையில் கொரோனா எல்லாவற்றையும் கடினமாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course