திருமணத்தை தள்ளிப்போட்ட பிரபல பாலிவுட் ஜோடி

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்,கடந்த சில மாதங்களாக இவர்கள் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த காதல் விவகாரம் தொடர்பாக இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட், அவரது மகளின் காதல் விவகாரம் தொடர்பாக முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், ஆமாம், எனது மகள் காதலிப்பது உண்மைதான். ஆனால், அவள் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ரன்பீர் கபூர் ஒரு நல்ல மனிதர். இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்ளயிருக்கிறார்கள் என்பது இப்போது தெரிவிக்க முடியாது. இது அவர்களது முடிவு என்று அவர் கூறியுள்ளார்.


ரன்பீர் என்ற கப்பல் இப்போது அலியா பட்டிடம் கரை ஒதுங்கியிருக்கிறது.கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், தங்களின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளது ரன்பீர் – அலியா ஜோடி.காதல் கடலில் நங்கூரமில்லாத கப்பலாக அலைந்தவர் ரன்பீர் கபூர். அவ்வப்போது ஏதாவது துறைமுகத்தில் கப்பல் இளைப்பாறும். அப்படி தீபிகா படுகோனுடன் கொஞ்ச நாள் காதலில் இருந்தார். பிறகு இந்த ஜோடி பிரிந்தது.

கரண் ஜோஹர் நடத்தும் டாக் ஷோவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனிடம், ரன்பீருக்கு என்ன பரிசளிக்க விரும்புகிறார்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர்  ஒரு பண்டல் காண்டம் என்றார் தீபிகா. இந்த பதில் சர்ச்சையானது. ரன்பீரைவிட அவரது தந்தை ரிஷி கபூர் அதிகம் கோபப்பட்டார். அந்த நேரம் அவரை தீபிகா பிரிந்திருந்தார். இப்போது தீபிகாவுக்கு திருமணமாகிவிட்டது. ரிஷி கபூர் மறைந்துவிட்டார். ரன்பீர் என்ற கப்பல் இப்போது அலியா பட்டிடம் கரை ஒதுங்கியிருக்கிறது. இருவரும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். 2020-ல் திருமணம் செய்வதாக இருந்த போது ரிஷி கபூர் இறந்தார். திருமணம் தள்ளிப் போனது. இந்த வருடம் திருமணத்தை நடத்த இருந்த போது இருவருக்குமே கோவிட் பாஸிடிவ். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், திருமணம் செய்கிற சூழல் இதுவல்ல என்று மறுபடியும் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top