எக்ஸ்பிரஷன் குயினால் ரசிகர்களின் இதயம் சுக்குநூறானது???

கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு ரசிகர்களால் எக்ஸ்பிரஷன் குயின் என்று செல்லமாக அழைக்கப்பட்டார் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி பின்பு தெலுங்கில் நடித்து வந்தார்.கடந்த சில வருடங்களில் இவரின் எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போது இந்தியாவின் கிரஷ்களில் இவரும் ஒருவர்.

 தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மேலும், தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ராஷ்மிகா அவரின் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாய் பரவும்.

இந்நிலையில், ராஷ்மிகா தற்போது அவரின் மனம் கவர்ந்தவர் என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்களின் இதயம் சுக்கு நூறாய் உடைந்து போனது. தற்போது ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளன. அந்த புகைப்படத்தின் பதிவில் அவரின் மனம் கவர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top