“தலைவி” படத்தின் டிரைலர் – கங்கனாவின் பிறந்தநாளான இன்று  வெளியீடு!!!

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் “தலைவி”. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.மற்றும் எம்.ஜி.ஆர்.போலவே நடித்துள்ளார் அரவிந்த்சாமி. மேலும்,இந்த படத்தில் சமுத்திரக்கனி,பூர்ணா,மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

 

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் அப்டேட் நடிகை கங்கனா அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு கொண்டே வந்தார். அதை தொடர்ந்து கங்கனா அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.

 

 

இன்று கங்கனாவின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் முதல் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். டிரைலரை பார்த்த ரசிகர்கள் கங்கனாவும் அரவிந்த் சாமியும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவாக வாழ்ந்து காட்டியுள்ளனர் என்று கூறும் அளவிற்கு இருவரும் நடிப்பில் அசத்தியுள்ளார். மேலும், இந்த படத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளனர். அதை தொடர்ந்து தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த படத்தினால் அரசியல் மற்றும் தேர்தல் காலத்தில் சலசலப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 

இந்த படத்தின் வசனங்கள் மேலும் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது என்று கூறும் அளவிற்கு அனைத்து வசனங்களும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதை தொடர்ந்து இந்த படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனராம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top