ராஜமவுலியின் அடுத்த பாகுபலி 3 – சொந்த தயாரிப்பில்…!!

பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகையே இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்த பிரமாண்ட படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வரலாறு காணாத பெரும் வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக அளவில் பிரபலமடைந்தனர்.

 

 

தற்போது இந்த படத்தை அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில் ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) என்று இருவரும் நடித்து வருகின்றனர். இந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 13 தேதி வெளியாகும் என்றும் இதை தொடர்ந்து 5 மொழிகளில் இந்த படம் உருவாக்கப்படுகிறார்கள்.

 

 இந்நிலையில் ராஜமௌலி அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகிவுள்ளது. இவர் அடுத்ததாக பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அந்த படத்தின் 3 பாகத்தை எடுக்கவுள்ளாராம். இதை தொடர்ந்து இந்த படத்திற்கு 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவுள்ளாராம் அதுவும் ராஜமௌலியின் சொந்த தயாரிப்பில் எடுக்கவுள்ளாராம்.

இந்த பாகுபலி 3 படத்தை 9 தொடர்களாக எடுத்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளாராம். அந்த வகையில் இது நேரடி படமாக இருக்குமா இல்லை அனிமேஷன் படமாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனராம்.

 ஆனால் ராஜமௌலியின் வட்டாரங்கள் இது அனிமேஷன் படமாக இருக்க தான் வாய்ப்புகள் இருக்கின்றது என்கிறார்களாம்.மேலும், இந்த படத்தை இவரே தயாரிப்பதால் எல்லா வேலைகளையும் பொறுமையாக செய்து வருகிறாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top