தேவசேனாவின் திருமண சர்ச்சை – மௌனம் காக்கும் நடிகை??

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி  நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. ஒரு காலத்தில் இந்த இரண்டு திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த அனுஷ்கா ஒரு படத்திற்காக தன் உடலெடையாய் உயர்த்தி மிகவும் குண்டாக மாறினார். இந்த படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்றும் தெலுங்கில் “Size 0” என்ற பெயரிலும் வெளியானது.

இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் சரிய தொடங்கியது. உடல் எடையை குறைக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளானார் . இதனால் பாகுபலி படத்திலும் உடல் பருமனான தோற்றத்தில் காட்சியளித்தார். 


அதன் பிறகு அனுஷ்காவின் திருமண சர்ச்சைகள் தொடங்கியது. இதுவே பெரும்பாலும் தலைப்பு செய்திகளாக இருந்ததையடுத்து தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. முதலில் பிரபாஸை திருமணம் செய்ய உள்ளதாக கிசுகிசுக்கள் பரவின ஆனால் பிரபலங்கள் இருவரும் அதனை மறுத்தனர். அதன் பிறகு இயக்குனர் ராகவேந்திரா ராவ் மகனை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது.

இதற்கெல்லாம் அடுத்து தற்போது துபாயில் குடியேறிய இளம் தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகியுள்ளது. அனுஷ்கா இந்த வதந்திக்கும் மவுனம் காத்து வருகிறார்.இந்நிலையில், யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “ஜாதி ரத்னாலு” என்ற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com