‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டேவிட் வார்னர் உற்சாகமுடன் நடனம்.

 

 

         விஜய்யின் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் “மாஸ்டர்”, இப்படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மிகவும் வெற்றி பாடலாக அமைந்தது. இப்பாடலுக்கு நடிகர்கள்,நடிகைகள், பிரபல கிரிக்கெட் வீரர்களும்  நடனமாடி இணையத்தில் வெளியிடுவது வழக்கம். 

 

 

அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் வீரரும், சன் ரைசஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு குதூகலமாக  நடனமாடி இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.வர்னருடன் புவனேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

ஏற்கனவே, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பலரும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அதேபோன்று சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் சமீபத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அவரது அணி வீரர்களுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குதூகலத்துடன் நடனம் ஆடியிருக்கிறார். ஏற்கனவே, டேவிட் வார்னரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top