கவுன்ட்டர் மன்னன்  கவுண்டமணி பிறந்த நாள் கொண்டாட்டம்.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை வித்தகர், 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளையும்  கொடுத்த நடிகர் கவுண்டமணி நேற்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் கொண்டாடுகிறது என்று சொல்வதே இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.

                         

அவரின் திரை பயணங்கள் ஏராளமாக இருந்தாலும், அந்த பயணத்தை அடைவதற்கு முன் அவரின் பல இன்னல்களில் ஒன்றை பார்க்கலாம்…. திரை உலகிற்கு வரும் முன்னே அவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். பல கஷ்டங்களுக்கு நடுவே அவரின் திரை பயணம் தொடங்கியது. 

இன்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்த நாள் - Expres Tamil

அவரும் அவர் நண்பரும், உணவுக்கு வழியில்லாமல் நின்ற பொழுது, தன் இரத்தத்தை தானமாக கொடுத்து தன் நண்பருக்கு பரோட்டா வாங்கி கொடுத்தாராம். இவ்வாறெல்லாம் பல இன்னல்களை தாண்டி இன்று திரையுலகில் அவரை தெரியாத ஆள் இருக்க முடியுமா. தன்னுடைய நையாண்டி பேச்சால் அனைவரையும் கவர்ந்து நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் செல்லப் பிள்ளையாக போற்ற பட்டவர்.

goundamani i am very happy ringtone by bibinmat

இன்றும் நகைச்சுவை சேனல்கள்  கவுண்டமணி, செந்தில் காம்போ இல்லாமால் நாள் நிறைவடையாது. காலத்தால் அழியாத வசனங்களுக்கு சொந்த காரர். இன்றும் இவரின் குறும்பு பேச்சை கேட்டால், சிரிக்காத ஆளே இல்லை. இன்று அவரின் பிறந்தநாளை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top