தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா உறுதி

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சினிமா பிரபலங்களும் பாதிப்புக்கு  உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தோர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் வேண்டுகோள் விடுத்ததுடன் அனைவரும் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்குமாறு இப்பதிவில் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top