காமெடி நடிகர் சென்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி! 

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து உயிரிழப்பும் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது காமெடி, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சென்ட்ராயன் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்  “நான் நடிக்கவில்லை உண்மையாகவே ஆவி பிடிக்கிறேன்.  இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் பாசிட்டிவாக  பாத்தேன் தற்போது எனக்கே கொரோனா பாசிட்டிவ்” என்று கூறினார். கொரோனா பரவலை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம் என்று எதார்த்ததுடன்  கூறியுள்ளார்.

மேலும் அவர் நாம் அனைவரும் நினைக்கும் அளவு இது சாதாரண தொற்று நோய் அல்ல அதனால் மக்கள் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அந்த வீடியோவின் மூலம் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top