வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஏழை மக்களுக்கு உதவிய பாலிவுட் நடிகை!

ஊரடங்கு கட்டுப்பாட்டில் உணவின்றி தவித்த மக்களுக்கு  பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் உதவி செய்து வருகிறார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த விதித்த ஊரடங்குளால் அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு மூலம் உணவில்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு  பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு மும்பையில் உணவு வழங்கி வருகிறார். 

இது சம்பந்தமாக நடிகை ஜாக்குலின் பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் மனதில் நிம்மதியும் அமைதியும் ஏற்படுகிறது என அன்னை தெரசா கூறியுள்ளார். அதன்படி இந்த கஷ்டமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை தான் கெளரவமாக நினைக்கின்றேன் என கூறியுள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course